வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (20:03 IST)

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு 8 நாட்கள் அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

senthil balaji
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு 8 நாட்கள் அனுமதி வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் தமிழகத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை செசன்ஸ் கோர்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை  தரப்பில் வக்கீல் ரமேஷும், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும்  கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.