திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:42 IST)

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் புகார்

uma anand
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் புகார்
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
 
கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்த பேச்சை திமுகவினரே ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா பேச்சை எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதத்தை அவமதித்து பேசியதாகவும் அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.