மு.க ஸ்டாலினின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கொரோனா உறுதி
உலக அளவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடிக்குமேல் அதிகரித்துள்ளது. சுமார் 6 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.30லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது
உலகில் உள்ள அமெரிக்கா, சீனா ஸ்பெயின், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே இந்தக் கொரொனா தொற்றுக்கு தகுந்த மருந்து கண்டுபிடிக்க திணறி வருகின்ற நிலையில் இந்தியா அரசு ஊரடங்கு உத்தரவுகளை செயல்படுத்தி திறமையாகவே கையாண்டு மக்களை தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறது.
இந்நிலையில் தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வாகனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.