வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (21:14 IST)

சென்னையின் 1277 தெருக்களில் அதிகரிக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் 1277 தெருக்களில் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
கடந்த 10 நாட்களில் சென்னையில் 39 ஆயிரம் தெருக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 1277 தெருக்களில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாகவும் கடந்த 10 நாட்களில் மட்டும் ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
20 தெருக்களில் தலா 3 பேர் வீதமும் 74 தெருக்களில் தலா இரண்டு பேர் வீதமும் 1600 தெருக்களில் தலா ஒருவர் வீதம் 300 பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தெருக்களில் யாரும் முகக்கவசம் இல்லாமல் அலட்சியமாக செல்ல வேண்டாம் என்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை சிகிச்சை பெறாமல் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்