அம்பேத்கரை விட கூட்டணி பெரிதா? திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி..!
இன்று விகடன் நிறுவனம் நடத்தும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து, திருமாவளவன் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ள நிலையில், "அம்பேத்கரை விட கூட்டணி பெரிதா?" என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கருவியாக நடத்தும் அளவுக்கு திருமாவளவன் பலவீனமானதாக இருக்கிறாரா?" என்ற கேள்வியை தமிழிசை எழுப்பியுள்ளார். அம்பேத்கர் புகழ் பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டிய திருமாவளவனுக்கு, அம்பேத்கரின் பெயரை வைத்து தன்னை காய் நகர்த்தி விட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
அந்த அளவுக்கு அவர் பலவீனமாக இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பிய தமிழிசை, "இது திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளியாகும்" என தெரிவித்துள்ளார். "அவர் அம்பேத்கரை சிறப்பிக்கிறாரா, அல்லது கூட்டணியை சிறப்பிக்கிறாரா?" என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
"நாம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்று கூறி, அம்பேத்கரை பிரதிநிதியாக திருமாவளவனை முதல்வர் அனுப்பி வைத்திருக்க வேண்டும் என தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். "எப்படிப் பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ, அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும்" என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
முதல்வருக்குப் பயந்து திருமாவளவன் அம்பேத்கர் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் முதல்வரும் திருமாவளவனும் தவறு இழைத்தவர்களாகவே நான் பார்க்கிறேன்" என்று தமிழிசை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva