ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (18:24 IST)

தமிழக எம்.பிக்கள் போட்ட கையெழுத்தால் சர்ச்சை : தமிழிசை கேள்வி

சமீபத்தில் பாராளுமன்றம்  முதல் கூட்டத்தொடரில் மக்களவைத் தேர்தலில் தமிழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் தமிழில் உறுதிமொழி எடுத்தனர்.ஆனால் அங்குள்ள ஏட்டில் கையெழுத்துப் போடும் போது ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர்.இதுகுறித்து   தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் பேட்டியளித்தார். அவர் கூறியுள்ளதாவது :
 
நாடாளுமன்றத்தில்,தமிழக எம்பிக்கள் செயற்கையான ஒரு மொழிப் பற்றை ஏற்படுத்தினர். பதவியேற்பின் போது மட்டும் தமிழில் உறுதிமொழி எடுத்துவிட்டு, ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதி எடுத்த தமிழர்கள், தங்கள் வருகையை பதிவு செய்வதற்க்காக அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். தமிழக எம்பிக்கள் அனைவருமே ஆங்கிலத்தில்தான் கையெழுத்திட்டனர். இது அங்கிருந்த திரையிலும் தெரிந்தது. இந்நிலையில் வெளியில் தமிழ் முழக்கம் வைப்பவர்கள் ஏன் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர்? சம்பளத்துக்காகவா? இவரகளுகு உண்மையான தமிழ்பற்று இல்லையா என நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் விமர்சித்துவருகின்றனர்.