செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (09:26 IST)

கண்டெய்னர் லாரி – பேருந்து மோதிய கோர விபத்து: 20 பேர் பலியான பரிதாபம்!

கண்டெய்னர் லாரி - பேருந்து மோதி விபத்து
திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியுடன் அரசு பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து ஆழப்புலா சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திருப்பூர் வழியாக வந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது எதிரே வந்த கேரள அரசு பேருந்துடன் கண்டெய்னர் லாரி பலமாக மோதியுள்ளது. இதனால் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலனவர்கள் கேரள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

விபத்துக்கு காரணம் கண்டெய்னர் லாரி டிரைவர் தூங்கியதுதான் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.