திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 2 ஜூன் 2016 (11:21 IST)

ஜெயலலிதா-வை "புகழ்ந்த" ஐஏஎஸ் அதிகாரிக்கு தலையில் "குட்டு" வைத்த அரசு

ஜெயலலிதா-வை "புகழ்ந்த" ஐஏஎஸ் அதிகாரிக்கு தலையில் "குட்டு" வைத்த அரசு

தமிழக முதல்வர் ஜெயலலிதா-வை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டிய ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேர்தல் நடைபெற்று, மே 19 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டும் வகையில், மத்திய பிரதேசம், நரசிங்கபூர் மாவட்ட கலெக்டர் சிபி சக்ரவர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழக முதல்வராக பதவியேற்ற அம்மாவுக்கு வாழ்த்துகள் என ஆங்கிலத்தில் வாழ்த்துச் செய்தியை மகிழ்ச்சியோடு பதிவு செய்தார். பின்பு, அது சர்ச்சையை ஏற்படுத்தவே, அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.
 
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தது குறித்து விளக்கம் கேட்டு, சிபி சக்ரவர்த்திக்கு மத்தியப் பிரதேச அரசு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதைக் கண்டு சிபி சக்ரவர்த்தி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளாராம்.  மேலும், இந்த சம்பவம் குறித்து, கருத்து தெரிவிக்க சிபி சக்ரவர்த்தி மறுத்துள்ளார்.