1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2025 (07:44 IST)

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Vadakalai Thenkalai
இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும்  சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் நடந்த சொர்க்கவாசல் நிகழ்வில் யார் பிரபந்தம் முதலில் பாடுவது என்பது குறித்த சண்டை வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் போட்டுக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் அஷ்டபூஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது. தென்கலை பிரிவினர்  பிரபந்தத்தை முதலில் பாடியதற்கு வடகலை பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் இரு பிரிவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பையும் ஒரே நேரத்தில் பாட அனுமதித்தார். அதற்கு பின்னரும் பிரச்சனை செய்தவர்களை கோயிலில் இருந்து காவல்துறை அதிகாரிகள் வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பலமுறை காஞ்சிபுரம் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று சொர்க்கவாசல் திறப்பில் தினத்தில் கூட மோதிக்கொண்டது பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva