அரசுப் பள்ளியில் ஒழுகும் கான்கிரீட் கட்டிடம் : வைரலாகும் வீடியோ!
கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை ! அரசு பள்ளியில் ஒழுகும் கான்கிரீட் கட்டிடத்தில் மாணவர்களின் படிப்பு ? மாணவர்களின் நிலை என்ன ?
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தே.இடையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமையும், திங்கள் கிழமையும் தீபாவளி பண்டிகையை யொட்டி, நேற்று பள்ளி துவங்கியது.
நேற்று முதல் இன்றுவரை பருவமழை லேசாக பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே கட்டிடத்தில் இருந்து மழைநீர் ஒழுகும் காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 5 வருடங்களாக சேதமடைந்த இந்த கட்டிடம் குறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை வட்டாரவளர்ச்சி அலுவலரிடமும், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனுக்களாக கொடுத்துள்ள நிலையில், இன்றுவரை அந்த கட்டிடத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை, மேலும், மழைநீர் ஒழுகும் கட்டிடத்தில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன ? என்றும் இந்திய அளவில் கல்வித்தரத்தில் தமிழகம் முதலிடம் நோக்கி என்று கூறும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த பள்ளிகளையும் காண வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த லேசான மழை திடீரென்று பலமாக பெய்தால் கூரைகள் மாணவர்கள் மேல் விழும் நிலையும், அபாயமும் ஏற்பட்டும் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவது ஏன் ? என்பது தான் தெரியவில்லை.