செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (20:15 IST)

'89 அடி உயர கிரெயினில்' இருந்து குதித்த ’ இளைஞர்’ : ’மரண டைவ்’ வைரல் வீடியோ !

நார்வே நாட்டைச் சேர்ந்த சாகச விரும்பி ஒருவர் 89 அடி உரய கிரேனில் இருந்து கடலில் குதித்து  ’மரண டைவ்’ அடித்து சாதனை செய்துள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நார்வே நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் எப்போது சாகசம் செய்வதில் குறியாக இருப்பார். இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று அந்த இளைஞர் ,  கப்பல்  மேல் நின்ற கிரேனில் சுமார் 89 அடி உயரத்தில் இருந்து கடலுக்குள் குதித்தார். கீழே ஐஸ் தண்ணீர் ஆகும். அதில் குதித்து சர்வசாதாரணமாக  நீச்சலித்து அடித்து வந்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இதற்கு முன்னர் இதுபோல் இவ்வளவு உயரத்திலிருந்து யாரும் குதித்ததில்லை என்பதால் இந்த’ மரண டைவ்’ சாதனையாக கருதப்படுகிறது.
 
அதே சமயம் இது ஆபத்தானது எனவும் பலரும் தெரிவித்துள்ளனர்.