ராஜபாளையம் தொகுதி யாருக்கு… பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே போட்டி!
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக ராஜபாளையம் தொகுதியில் நடிகை கௌதமியை களமிறக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் பாஜக 20 தொகுதிகளைக் கேட்டு பெற்றுள்ளது. ஆனால் 20 தொகுதிகள் எவை என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்நிலையில் ராஜபாளையம் தொகுதிக்கு இருக் கட்சியினரும் விருப்பப் படுவதாக சொல்லப்படுகிறது.
பாஜக சார்பில் நடிகை கௌதமி நிற்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட முனைப்புடன் இருக்கிறாராம். இரு கட்சிகளும் சுவர்களில் தங்கள் சின்னத்தை வரைந்து பிரச்சாரத்தை ஆரம்பித்து வருகிறார்களாம்.