1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:47 IST)

அண்ணாமலையே போட்டியிட்டாலும் வெற்றி திமுகவிற்குத்தான்: முத்தரசன்

Mutharasan
மதுரை கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலையே போட்டியிட்டாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 
மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ தமிழ்மகன் ஈவேரா காலமானதை அடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியின் சார்பிலோ அல்லது தனித்தோ அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையே போட்டியிட்டாலும் திமுக கூட்டணி தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவே தற்போது 4 பிரிவுகளாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணி என்பது எங்கே இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran