1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (10:57 IST)

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது போல ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று எல்பிஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை மட்டும் உயர்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.2234.50 என உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி டெல்லி மும்பை கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது