ஆகஸ்ட். 1 ஆம் தேதிக்கு பிறகே கல்லூரி சேர்க்கை - அமைச்சர் பொன்முடி
ஆகஸ்ட். 1 ஆம் தேதிக்கு பிறகே கல்லூரி சேர்க்கை தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.
11 ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை எப்போது என கேள்வி எழுந்துள்ளது. இதனால் இது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் ஈடுபட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடனான ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த விவரம் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வருடன் ஆலோசனையை முடித்துக்கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பின்வருமாறு பேட்டியளித்தார்... ஜூலை 31 ஆம் தேதிக்குள் +2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இறுதிசெய்யப்பட்டு விடும். எனவே இதன் பின்னர் தான் மாணவர் சேர்க்கை துவங்கும். மேலும் இதற்கு முன்னதாக தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், பொறியியல் கல்லூர்களில் வழக்கமான சேர்க்கை முறையே தொடரும் என அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.