1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (17:43 IST)

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை.. சிறுமி மீது தவறு என ஆட்சியர் பேச்சு..!

மயிலாடுதுறையில் மூன்று வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமி மீதும் தவறு என்று மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 24 ஆம் தேதி மூன்று வயது சிறுமி அங்கன்வாடிக்கு சென்றபோது 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சமூகத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் 16 வயது சிறுமியின் முகத்தில்  சிறுமி எச்சில் துப்பியதுதான் வன்கொடுமைக்கு காரணம் என்றும் சிறுமி மீது தவறு உள்ளது என்றும் பேசியதாக தெரிகிறது.
 
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளதாக பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva