மயிலாடுதுறையில் 3 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி மீதும் தவறு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு 3 வயது சிறுமி சென்றார். அப்போது சிறுமியை 16 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை செய்யவும் முயன்றுள்ளார். இதில் சிறுமி கத்தியதால் சிறுமியை கல்லால் தலை மற்றும் கண்ணில் அடித்து சிதைத்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்த வன்கொடுமை சம்பவத்தில், 16 வயது சிறுவனின் முகத்தில் சிறுமி எச்சில் துப்பயதுதான் வன்கொடுமைக்கு காரணமாக அமைந்தது என பேசியது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K