போதையில் 17 வயது சிறுவன்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சுட்டு கொல்ல என கூறும் தாய்..!
17 வயது சிறுவன் போதையில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த சிறுவனை சுட்டுக் கொல்ல வேண்டும் என சிறுமியின் தாயார் ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஐந்து வயது சிறுமி திடீரென கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் காணாமல் போன நிலையில் அவருடைய வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் பெண்ணுறுப்பு உட்பட பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குழந்தை கண்விழித்த போதிலும் அதிர்ச்சியால் யாரிடம் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது 17 வயது சிறுவனை கைது செய்தனர். அந்த சிறுவன் மது போதையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட சிறுமியின் தாயார் அந்த சிறுவனை நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அரசியல் கட்சிகளும் அந்த சிறுவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva