1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (14:00 IST)

மின்னல் வேகத்தில் மோதிய பைக்; இருவர் பலி! – வெளியான பரபரப்பு வீடியோ!

Accident
கோவையில் பைக்கில் இருவர் வேகமாக சென்று சுவரில் மோதி இறந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என அரசும், போக்குவரத்து துறையும் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் அன்னனூர் பகுதியில் மது அருந்திய மூவர் அதிகவேகமாக ஒரே பைக்கை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த அவர்கள் அங்குள்ள கழிப்பிட சுவர் மீது மோதினர். உடனடியாக சுற்றியிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்து அவர்களை மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னே அவர்களில் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மது அருந்திவிட்டு வேகமாக பைக்கில் சென்று விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை ஷேர் செய்துள்ள பலர் இதுபோன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.