மாநில அரசை மதிக்காமல் ஆளுனர் செயல்படுகிறார்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்வதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைகழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுனருக்கு உள்ள நிலையில், ஆளுனர் துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பல்கலைகழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதாவை திமுக தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளன.
இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதா குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மாநில அரசை மதிக்காமல் ஆளுனர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது. ஆளுனரின் செயல்பாடுகளால் பல்கலைகழக நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படுகின்றது. துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை மதிக்காமல் செயல்படுவது மக்களாட்சிக்கு விரோதமானது” என்று தெரிவித்துள்ளார்.