1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (07:57 IST)

நீட் மோசடி வழக்கை விசாரித்த கோவை சரக டிஐஜி தற்கொலை: அதிர்ச்சி தகவல்..!

நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரணை செய்து கொண்டிருந்த கோவை சரக டிஐஜி திடீர் என தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. க
 
டந்த ஜனவரி மாதம் கோவை சரக டி.ஐ.ஜியாக விஜயகுமார் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும் அவர் அந்த பகுதியின் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கண்காணித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சில வாரங்களாக நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by siva