Daily Horoscope
✕

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது!

Written By Siva
Updated: புதன், 28 டிசம்பர் 2022 (17:36 IST)
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் திடீரென கார் வெடிகுண்டு வெடித்தது என்பதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் தீவிரவாதிகளின் கைவரிசை என பாஜக கூறிய நிலையில் தமிழக அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 2வது இடத்தை பிடிக்க அதிமுக, திமுக போட்டோ போட்டி..

இடைத்தேதல் வாக்கு எண்ணிக்கை!.. முதல் சுற்றில் 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை..

மாறியது டிரெண்ட்.. தவெக முதலிடம்.. அதிமுக 2வது இடம்.. 3வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்படும் திமுக..

தாராபுரத்தில் அதிமுக 2வது இடம்.. திமுக 3வது இடம்.. தவெக வெற்றி உறுதி.. 2வது 3வது இடத்துக்கு தான் போட்டி..

2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை!.. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments