Daily Horoscope
✕

சென்னையில் டீ, காபி விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 2 ஏப்ரல் 2022 (11:39 IST)
பால், கியாஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது. 

 
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
 
ஆம், கியாஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் டீ கடைகளில் டீ, காபி விலை திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. 
 
பால், கியாஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ விலை ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆகவும் விற்கப்படுகிறது. பார்சல் டீ ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், பார்சல் காபி ரூ.35 முதல் ரூ.40 வரையில் விற்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. என்ன காரணம்?

ரூ.94 லட்சம் மதிப்புள்ள ஆடம்பரமான வாட்ச் பறிமுதல்.. துபாயில் இருந்து வந்த பயணி கைது...

சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலையை ஏற்றிய ரெட்மி.. மெமரி சிப் விலை உயர்வு தான் காரணமா?

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா!.. ராகுல் போனை எடுக்காத முக ஸ்டாலின்!..

அடுத்த கட்டுரையில்
Show comments