செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (10:33 IST)

வெளியானது கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா டீசர்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப் என்பதும் இவர் நடித்துவரும் திரைப்படம் ஒன்று 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழில் இந்த டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். படத்தின் டீசரோடு ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.