ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 மே 2024 (17:26 IST)

நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்.. ரேஷன் கடைபணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

Ration rice
நியாய விலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகரில் காலை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல், 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் சரியான நேரத்திற்கு திறப்பதில்லை என்று பொதுமக்களில் பலர் புகார் அளித்துள்ள நிலையில் கூட்டுறவுத்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் நேரம் தவறும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் ரேசன் கடை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran