வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மே 2024 (06:40 IST)

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
வங்க கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு தோன்றியது என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்த நிலையில் இன்று அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதாக கூறியிருப்பதை அடுத்து ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் மத்திய வங்க கடல் பகுதியில் நிலவி வங்கதேசத்தை நோக்கி செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் 25ஆம் தேதி புயலாக மாறுமா என்பது தெரியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Edited by Siva