வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (14:49 IST)

மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்? செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

modi amithsha
ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழக  காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக பாஜகவுக்கு எதிராக அவர் ஆவேசமாக பேசி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஒடிசாவில் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு குறித்து அவமரியாதையாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் மோடியும் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva