1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (12:11 IST)

மலையாளத்தில் ஓணம் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Onam
கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் ஓணம் கொண்டாடும் கேரள மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர் 
 
அந்த வகையில் ஓணம் கொண்டாடும் கேரள மக்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள்! ஓணம் பண்டிகை புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிப்பதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இது திராவிடர்களுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்பை காட்டுகிறது. கருத்து வேறுபாடுகளை களைந்து உறவை வலுப்படுத்துவோம் என தமிழக முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.