வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று முதல் மக்களை தேடி வரும் மருத்துவம்: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்!

தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து இருந்தார் 
அந்த வகையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமணபள்ளி என்ற இடத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவர் இன்று திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு முறையும் மருத்துவமனை தேடிச் சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலையில் மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டத்தின்படி அவர்களுக்கு வீடுகளுக்கே வந்து மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கான திட்டம்தான் மக்களை தேடி வரும் மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கும் நிலையில் அவரே இரண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று மருந்து மாத்திரை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது