வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:35 IST)

ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.. முதல்வர் ஆவேச பேச்சு..!

Stalin
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மகளிர் உரிமை திட்டம் மூலம் பெண்கள் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகள் ஸ்டாலின் தான் ஆளுகிறான் என்று பொருள் என்று தமிழக முதல்வர் ஆவேசமாக பேசி உள்ளார். 
 
இன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசிய போது  என்னுடைய வாழ்க்கையில் இருந்த மேடு பள்ளங்களை கடந்த நான் வரவும் எனக்கு ஊக்கமாக இருந்து சக்தி என்னுடைய மனைவி துர்கா தான் என்று தெரிவித்தார். 
 
மேலும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் அவர் கூறினார்.  
 
தமிழ்நாடு என்ற பெயர் எத்தனை ஆண்டுகள் இருக்குமோ அத்தனை ஆண்டுகளும்  நான் தான் ஆள்கிறேன் என்று பொருள் என்று  அண்ணா கூறினார். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பெண்கள் எத்தனை ஆண்டுகள் பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின் தான் ஆளுகிறான் என்று பொருள் என்று கூறினார்
 
Edited by Mahendran