தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் திருவிழாக்கள் அரசியல் சமுதாய மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை நீடிப்பு வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்
தமிழ்நாட்டில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் இருப்பினும் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தளர்வுகளை தேவையின்றி பயன்படுத்தி கொரோனாவை வரவழைத்து கொள்ள கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிப்பு -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு