செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:23 IST)

தமிழகத்தில் 3வது அலை: முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

இந்தியாவில் ஒரு சில இடங்களில் குறிப்பாக மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் மூன்றாவது அறை தோன்றி விட்டதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அறை குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
 
கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும். பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்; கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
 
3வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது