1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (16:14 IST)

ஹூட் செயலியில் இணைந்த முதல்வர்: செளந்தர்யா ரஜினி வரவேற்பு!

ஹூட் செயலியில் இணைந்த முதல்வர்: செளந்தர்யா ரஜினி வரவேற்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமிபத்தில் ஹுட் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் இந்த செயலியை பிரபலங்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஹுட் செயலியில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu  என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம்’ என பதிவு செய்துள்ளார்.
 
 சமூக வலைதளங்களில் குரல் மூலம் தமது கருத்துக்களை மு க ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது