1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (11:14 IST)

தங்கமகன் மாரியப்பனுக்கு அரசு வேலை: முதல்வர் ஆணை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு அரசு வேலை ஆணையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்துள்ளார் 
 
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அது குறித்த உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
குரூப்-1 பணிக்கான பணி நியமன ஆணை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் மாரியப்பன் தங்கவேலு பேட்டி அளித்துள்ளார். 
தமிழ்நாடு காகித ஆலை மார்க்கெட்டிங் பிரிவு துணைமேலாளர் பதவி மாரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.