பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு!
விருதுநகர் அருகே இன்று காலை பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியான நிலையில் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. விருதுநகர் மாவட்டம் வையம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 3 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்
இவ்வாறு முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.