சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: முதல்வர் அறிவிப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்
மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து தீபாவளி கொண்டாட வெளியூர் சென்றவர்கள் அவசரப்பட்டு சென்னைக்கு திரும்ப வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது