திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (14:52 IST)

மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு பணி: முதல்வர் ஈபிஎஸ் அசத்தல்!

மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு பணி:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் தூத்துக்குடியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மாற்று திறனாளி பெண் ஒருவர் முதல்வரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். தனக்கு அரசுப்பணி வேண்டும் என்று கேட்டு அவர் அளித்த மனுவை வாங்கி பரிவுடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
 
சாலையோரம் நின்று முதலமைச்சரிடம் அரசு  வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் பணி நியமன ஆணை வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தமிழக வரலாற்றில் மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை கிடைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் முதல்வரின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளுக்கு அந்த பெண் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது