வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (08:19 IST)

முதல்வர், அமைச்சர்களின் சம்பளதை பிடித்தாவது வேலை வாங்கி தருவோம்! – தேஜஸ்வி யாதவ் கடைசி அஸ்திரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் தொடங்கி மூன்று கட்டமாக நடந்து வரும் நிலையில் அமைச்சர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்தாவது வேலை வாங்கி தருவதாக தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி மூன்று கட்டமாக நவம்பர் 7 வரை நடைபெறும் நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் நிதிஷ் குமாரின் ஜனதா தள் மற்றும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்துள்ள நிலையில் லலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பீகாரில் வேலைவாய்ப்பு என்பது பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் தனது பிரச்சாரத்தின் முக்கிய டேர்கெட்டாக வேலைவாய்ப்பை முன்னிறுத்தியுள்ளார் தேஜஸ்வி யாதவ். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் “பீகார் இளைஞர்களுக்கு கண்டிப்பாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மக்களுக்காக அதையும் செய்வோம்” என பேசியுள்ளார்.