வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (16:17 IST)

தம்பி ட்விட்டரில்.. அண்ணன் நேரில்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின் – சிரஞ்சீவி சந்திப்பு!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தெலுங்கு நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யாண் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.