செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2025 (16:52 IST)

17 வயது சிறுமி 2 மாத கர்ப்பம்.. திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது..!

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதை அடுத்து, திருமணம் செய்து வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக நலத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்ததாகவும், தற்போது அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி, மூக்கன், ராணி, முத்து ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கைதான நால்வரும் சிறுமியின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது.

பெண்களின் திருமண வயது 18 என்று அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ள நிலையில், 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைப்பது சட்டவிரோதமான குற்றம். இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்றும், குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Edited by Siva