வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (20:38 IST)

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

Stalin Senthil Balaji
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 
2-நாட்கள் அரசு முறைப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.  இந்த சந்திப்பிற்கு பிறகு மாலை 5.35 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். 

இன்று இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, அமைச்சர்கள் வரவேற்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.