ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (18:37 IST)

பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என நீட்டை தமிழ் நாட்டிற்குள் நுழைய விட்டனர்- முதல்வர் ஸ்டாலின்

EPS Stalin
சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மடிக்கணணினிகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதன் பின்னர் முதல்வர்  ஸ்டாலின் கூறியதாவது:

தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. அதிமுக ஆட்சியிலும்,  மறைந்த ஜெயலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில்   நீட்டை தமிழகத்திற்குள் ம்னுழையவிடல்லை.

ஆனால், அவரது ஆட்சிக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ் நாட்ற்குள் நுழையவிட்டனர் என  அதிமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் குய்ற்றம்சாட்டியுள்ளார்.