1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified சனி, 9 ஏப்ரல் 2022 (18:22 IST)

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் ..அதிர்ச்சி சம்பவம்

மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த தளக்காயல் என்ற பகுதிலுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பூமி  நாதன். இவர்து மகள் செல்வி. இவருக்கும் பாலு என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இ ந் நிலையில், பாலுவுக்கும் செல்விக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். செல்வி தனது மகன் களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாலு மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவி மற்றும் மகன் களை தன்னுடம் அனுப்பிவைக்கும்படி கூறியுள்ளார்.

தன் மகளையும் பேரன் களையும் அனுப்ப முடியாது  என மாமியார் கூறியதால் ஆத்திரம் அடைந்த பாலு, கத்தியை எடுத்து, மாமியாலை சரமாரியாகக் குத்தினார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.