முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உரையாடினார்.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில், திமுக கூட்டணியில், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ள நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே தமிழ் நாடு முழுக்க கமல்ஹாசன் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உரையாடினார்.
இதுகுறித்து கமல் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களோடு உரையாடினேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம்.
ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்என்று தெரிவித்துள்ளார்.