வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (14:38 IST)

"தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது-கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக எல்லோரவது கவனத்தையும் பெற்றவர்ன் டேனியல் பாலாஜி. இவர் காதல் கொண்டேன். காக்க காக்க,கணேசா, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், சிறுத்தை,  உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி
.
இவரின் அண்ணன்  மறைந்த நடிகர் முரளி. அவர் முன்னணி நடிகராக இருந்தபோது டேனியல் பாலாஜிக்கு சிபாரிசு செய்யவில்லை என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், டேனியல் பாலாஜி நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் மரணம் சினிமாத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில்,  தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என்று கமல்ஹாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜி குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதல். கண் தானம் செய்ததால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.