1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (08:58 IST)

விமானத்தில் யோகா செய்த இளைஞர் இறக்கிவிடப்பட்டாரா? சென்னையில் பரபரப்பு

யோகா கலையை அனைவரும் கற்க வேண்டும் என்றும், யோகா மனதிற்கும் உடல்நலனுக்கும் நல்லது என்றும் கூறப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் ஆண்டுதோறும் ‘யோகா தினம்’ என்றும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த விமானம் ஒன்றில் யோகா செய்த இளைஞர் ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று காலை சென்னையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார் விமானம் கொழும்பு செல்ல தயாரானது. இந்த விமானத்தில் குணசேனா என்ற இளைஞர் பயணம் செய்தார். விமானத்தில் ஏறிய இளைஞர் குணசேனா திடீரென விமானத்தின் உள்ளே யோகா செய்ய தொடங்கினார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பிற பயணிகளுக்கு க்கு தொல்லை கொடுக்கும் விதமாக அவர் யோகா  உடற்பயிற்சி செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இளைஞர் குணசேனாவை இறக்கிவிட்டு அவரின் டிக்கெட் கட்டணத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திருப்பி தந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது
 
விமானத்தின் உள்ளே யோகா செய்ததால் சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் இறக்கிவிடப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது