செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:53 IST)

மெட்ரோ ரயிலில் 50% தள்ளுபடி..

சென்னை மெட்ரோ ரயிலில் விடுமுறைகளில் 50 % கட்டண சலுகையை அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் சென்னை வாசிகளின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. மின்சார ரயில்களை போல் மெட்ரோ ரயில்களை பயணிகள் பரவலாக பயணிக்க தொடங்கிவிட்டார்கள்.

எனினும் பயணிகளின் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஞாயிறுகளிலும் விடுமுறை நாட்களிலும் பாதி கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்ற திட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிறுகளிலும் விடுமுறை நாட்களிலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் இந்த கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.