புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:09 IST)

ரயில்நிலையம் அருகே மாணவி குத்திக்கொலை! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அருகே தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தாம்பரத்தில் கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவர் ரயில் நிலையம் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ராமு என்ற இளைஞர் ஸ்வேதாவை கண்மூடிதனமாக கத்தியால் குத்தியதில் ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் மாணவியை குத்தியதோடு மட்டுமல்லாமல் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொள்ளவும் அந்த இளைஞன் முயன்றுள்ளான். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.