Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

Written By Siva
Updated: வெள்ளி, 3 மே 2024 (15:22 IST)
சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி  குடிநீர் வழங்கப்படும்"
 
பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது
 
சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே சென்னையில் அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
 
தென்னிந்தியாவில் குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும் நிலையில் அந்நகரில் உள்ள மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால் அந்த நிலை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு நகருக்கும் வராது என்று கூறப்படுகிறது 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments