வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (08:59 IST)

படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர்களின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலை அதிரடி

படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர்களின் தேர்வு முடிவை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் என குறிப்பிட்டு முறைகேடாக 117 பேர் இந்த தேர்வை எழுதி பட்டம் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து தேர்வு முறைகேடாக தேர்வு எழுதிய 117 பேர் தேர்வு முடிவுகளை ரத்து செய்வதாக சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது 
 
தொலைதூர கல்வி மையங்கள் நடத்துவோர் ரூபாய் 3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக படிக்காதவர்களுக்கு சான்றிதழ் பெற்று தர முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்ததாக பல்கலைகழகம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்